சென்னையில் நடைபெற்ற ‘வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர் மாநாடு 2026’-ல், தூத்துக்குடியில் இந்தியாவின் முதல் தனியார் சுற்றுப்பாதை ஏவுகலன் தயாரிப்பு ஆலையை அமைப்பதற்காக ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. ஏவுகலன்களை உற்பத்தி செய்தல், சேமித்தல், ஒருங்கிணைத்தல் மற்றும் சோதனை செய்தல் போன்ற நவீன வசதிகளுடன் அமையவுள்ள இத்திட்டத்திற்காக சுமார் ரூ.250 கோடி நிதி முதலீடு செய்யப்படவுள்ளது.