ஜூன் 5-ஆம் தேதியுடன் முடிந்த வாரத்தில் இந்தியாவின் அந்நிய செலாவணி இருப்பு 71.1 கோடி டாலர் சரிந்து 681.610 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது என ஆர்பிஐ தெரிவித்துள்ளது. இதற்கு முந்தைய வாரத்தில் இது 93.9 கோடி டாலர் உயர்ந்து 682.321 பில்லியன் டாலராக இருந்தது. வெளிநாட்டு நாணய சொத்துகள் 2.704 பில்லியன் டாலர் குறைந்து 543.444 பில்லியன் டாலரான நிலையிலும், தங்கம் இருப்பு 1.975 பில்லியன் டாலர் உயர்ந்து 114.575 பில்லியன் டாலராக உள்ளது.