இந்தியாவின் முதல் காகிதமில்லா மாவட்ட நீதிமன்றம்

இந்தியாவின் முதல் முழுமையான காகிதமில்லா மாவட்ட நீதிமன்றமாக கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் உள்ள கல்பேட்டா நீதிமன்றம் உருவெடுத்துள்ளது. கேரள உயர் நீதிமன்றத்தால் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட இந்த அமைப்பின் மூலம், வழக்கு தாக்கல் முதல் இறுதி தீர்ப்பு வரை அனைத்து நீதித்துறை நடவடிக்கைகளும் இனி மின்னணு முறையில் மட்டுமே நடைபெறும். நீதித்துறையை டிஜிட்டல் மயமாக்கும் முயற்சியில் ஒரு முன்னோடியாக திகழும் இத்திட்டம், நிர்வாக திறனை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி