இந்தியாவின் முதல் இறையாண்மை செயற்கை நுண்ணறிவு (AI) பூங்காவை ரூ.10,000 கோடி மதிப்பீட்டில் அமைக்க தமிழ்நாடு அரசு 'சர்வம் AI' நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. பாதுகாப்பான தரவு அமைப்புகள் மற்றும் ஆராய்ச்சி ஆய்வகங்களுடன் இது நிறுவப்படவுள்ள நிலையில், இதன் மூலம் சுமார் 1,000 உயர் திறன் கொண்ட தொழில்நுட்ப வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட உள்ளன. பொதுத்துறை நிர்வாகத்தில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டை ஊக்குவிக்க, பிரத்யேக ஆளுகை நிறுவனமும் இந்த பூங்காவில் இடம்பெற இருக்கிறது.