பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை மேற்கொண்டதைத் தொடர்ந்து, இரு நாடுகளும் வான்வெளித் தடைகளை விதித்தன. இந்நிலையில், இந்திய விமான நிறுவனங்கள் தனது நாட்டின் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கான தடையை ஜூலை 24 ஆம் தேதி வரை நீட்டிப்பதாகப் பாகிஸ்தான் தற்போது உத்தரவிட்டுள்ளது. இதனால் இந்திய விமானங்களின் தடைக்காலம் மேலும் நீண்டுள்ளது.