சிறுநீரக பாதிப்பில் இந்தியா உலக அளவில் 2 வது இடத்தில் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. “தி லான்செட்” மருத்துவ இதழில் வெளியான 2023-ஆம் ஆண்டின் ஆய்வு கணக்கின்படி, சீனாவில் 15.2 கோடி மக்களும் இந்தியாவில் 13.8 கோடி மக்களும் நாள்பட்ட சிறுநீரக நோயால் (Chronic Kidney Disease) பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதனால் சீனாவை அடுத்து இந்தியா சிறுநீரக நோயால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக பதிவாகியுள்ளது.