உலகளவில் தங்கம் வாங்கிய நாடுகளின் பட்டியலில் இந்தியா 2வது இடத்தைப் பிடித்துள்ளது. செப்டம்பர் காலாண்டில் இந்தியா மொத்தம் 55 டன் தங்கத்தை வாங்கியுள்ளது. சீனா 80 டன் தங்கத்துடன் முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் தங்க விற்பனையின் மொத்த மதிப்பு ரூ.81,890 கோடியாக உயர்ந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தங்கத்தின் மீதான இந்தியர்களின் ஆர்வம் தொடர்ந்து அதிகரித்து வருவதை இந்தப் புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்துகின்றன.