பாகிஸ்தான் ராணுவத்துக்கு இந்திய ராணுவம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருநாட்டின் ராணுவ நடவடிக்கைகளுக்கான ஜெனரல்கள் ஹாட் லைன் வாயிலாக நேற்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது பாகிஸ்தான் ராணுவத்தினர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் எந்தவித தூண்டுதலும் இன்றி அத்துமீறலில் ஈடுபவது குறித்து இந்தியா பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து இருநாடுகளுக்கு இடையே போர் பதற்றம் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.