நாடாளுமன்றத்தில் இன்று (பிப்.5) பிரதமர் மோடி பேசி வரும் நிலையில், எதிர்கட்சியினர் அமளியில் ஈடுபட்டுள்ளனர். பிரதமர் கூறியதாவது, “இந்திய நாடு சரியான திசையில் வேகமாக முன்னேறி வருகிறது. உலகின் 3ஆவது பொருளாதாரமாக இந்தியா விரைவில் மாற உள்ளது” என்றார். பிரதமர் மோடி உரையாற்றி வரும் நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். அப்போது, தன்னை பேசவிடுமாறு எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.
நன்றி: NewsTamilTV24x7