கேரளா முதல்வர் பிரனாய் விஜயன், பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் இடதுசாரி கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். அந்தவகையில் திருவன்னதபுரத்தில் பேசிய அவர், மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கையால் நாட்டில் கோடிக்கணக்கான பொதுமக்கள் அச்சத்துடன் வாழ்கின்றனர். இந்தியாவுக்கு உலக நாடுகளிலேயே களங்கம் ஏற்பட்டுள்ளது. ஐநா சபை மற்றும் அமெரிக்கா, ஜெர்மனி போன்ற நாடுகள் இந்தியாவின் நடவடிக்கைகளை தொடர்ந்து விமர்சித்துள்ளன. இப்படி ஒரு நிலைமை இதற்கு முன்பு இந்தியாவிற்கு வந்ததே இல்லை என்று தெரிவித்தார்.