ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபுதாபியில் உள்ள பரக்கா அணுமின் நிலையம் மீது நேற்று டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் மின்சார ஜெனரேட்டர் தீப்பற்றி எரிந்தாலும், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் கதிர்வீச்சு அபாயம் இல்லை என்றும் அந்நாட்டு அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. தாக்குதல் நடத்தியது யார்? என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை. இந்த சம்பவத்திற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.