ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

சிட்னியில் நடைபெற்ற இந்தியா-ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரின் கடைசி ஆட்டத்தில், ஆஸ்திரேலியா 236 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 237 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி, ரோகித் சர்மா (121) மற்றும் விராட் கோலி (74) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 38.3 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்கள் அடித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் இந்திய பந்துவீச்சாளர்கள் அனைவரும் குறைந்தபட்சம் ஒரு விக்கெட் வீழ்த்தி 1986-க்குப் பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் புதிய சாதனை படைத்தனர்.

தொடர்புடைய செய்தி