இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அணிக்கு எதிராக 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் ஆடவிருந்தது. இந்நிலையில், அந்நாட்டில் நிலவும் அரசியல் சூழ்நிலை காரணமாக இந்தத் தொடர்களை ஒத்திவைக்க இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களும் முடிவு செய்துள்ளன. ஆகஸ்ட் 17-ம் தேதி தொடங்கவிருந்த இப்போட்டிகள் அடுத்தாண்டு செப்டம்பர் மாதத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக பி.சி.சி.ஐ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. புதிய தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.