இந்தியா – மலேசியா இடையே 11 புரிந்துணர்வு ஒப்பந்தம் பிரதமர் மோடி மற்றும் மலேசியா பிரதமர் அன்வார் இப்ராஹிம் முன்னிலையில் இன்று (பிப்.8) கையெழுத்தானது. மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமுடன் பிரதமர் மோடி, இருதரப்பு உயர்நிலை பேச்சுவார்த்தையை நடத்தினார். அப்போது இருநாடுகளும் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. பேச்சுவார்த்தைக்குப் பின், முக்கிய ஒப்பந்தங்கள் பிரதமர் மோடி மற்றும் மலேசிய பிரதமர் முன்னிலையில் கையெழுத்தானது.
நன்றி: DDNewsOdia