இந்தியா - ஜிம்பாப்வே மகளிர் அணிகள் இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராய்ப்பூரில் இன்று (அக்.18) நடைபெற்ற ஆட்டத்தில், டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்தது. 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 102 ரன்கள் குவித்தது. தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 8.5 ஓவர்களில் 1 விக்கெட்டை இழந்து 104 ரன்கள் எடுத்து வெற்றிப் பெற்றது. இதன்மூலம் 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.