10-வது ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று (பிப்.7) தொடங்கிய நிலையில், மும்பையில் இந்தியா - அமெரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெறுகிறது. இதில், டாஸ் வென்ற அமெரிக்க அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய இந்திய அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து, 161 ரன்களை குவித்துள்ளது. தொடர்ந்து, 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி அமெரிக்க அணி விளையாடவுள்ளது.