டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா தனது முதல் சூப்பர் 8 போட்டியில் தென்னாப்பிரிக்காவை இன்று (பிப்.22) எதிர்கொள்கிறது. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதனைத் தொடர்ந்து, இந்திய அணி பவுலிங் செய்ய தயராகி வருகிறது. லீக் சுற்றில் தோல்வியையே சந்திக்காத இரு பலம் வாய்ந்த அணிகள் இன்று மோதுவதால் இந்தப் போட்டியின் முடிவை அறிய கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.