தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டம் இன்று (நவ.15) நடைபெற்றது. இதில், இந்திய அணி 189 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்கா அணி 35 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 93 ரன்கள் குவித்தது. இந்நிலையில் இன்றைய ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 63 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. தொடர்ந்து, நாளை (நவ.16) மூன்றாவது நாள் ஆட்டம் நடைபெறவுள்ளது.