IND vs SA: 6 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாற்றம்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இன்று (நவ.24) நடந்து வரும் 2ஆவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிவருகிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி, முதலில் களமிறங்கி, முதல் இன்னிங்ஸில் 489/10 ரன்களை குவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்து வரும் இந்திய அணி, 121 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்துள்ளது. இதில் அதிகபட்சமாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் 58 ரன்கள் எடுத்தார்.

தொடர்புடைய செய்தி