கழுத்து காயம் காரணமாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இருந்து சுப்மன் கில் விலகியுள்ளார். இந்த நிலையில் கவுகாத்தியில் நடைபெறும் போட்டியில் ரிஷப் பந்த் கேப்டனாக செயல்படுவார் என பிசிசிஐ உறுதி செய்துள்ளது. காயம் காரணமாக கில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டார். பின்னர், அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இரண்டு நாட்களுக்கு முன்பு இந்திய அணியுடன் கவுகாத்திக்கு பயணம் செய்தார்.