இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று (ஜன.14) குஜராத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 284 ரன்கள் குவித்தது. அதிரடியாக விளையாடிய நட்சத்திர வீரர் கே.எல். ராகுல், 92 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன் 112 ரன்கள் விளாசினார். இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணி, 47.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 286 ரன்கள் எடுத்து அபார வெற்றிப் பெற்றது.