சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு..! நள்ளிரவு முதல் அமல்

தமிழகத்திலுள்ள 25 சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு (செப். 1) முதல் சுங்க கட்டண உயர்வு அமல்படுத்தப்பட உள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் அறிவிப்பின்படி, விக்கிரவாண்டி, உளுந்தூர் பேட்டை, சமயபுரம், மதுரை, வாலாஜா, ஸ்ரீபெரும்புதூர் உள்பட 25 சுங்கச்சாவடிகளில் 5% - 7% வரை கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கட்டண உயர்வு மூலம் ஒரு வாகனத்திற்கு சுங்கச்சாவடிக் கட்டணம் ரூ.5 முதல் ரூ.10 வரை கூடுதலாக அதிகரிக்க உள்ளது.

தொடர்புடைய செய்தி