கத்தரிக்காய் கிலோ ரூ.50-க்கு விற்பனை - விவசாயிகள் மகிழ்ச்சி

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாதகமான வானிலையால் கத்தரிக்காய் விளைச்சல் கணிசமாக அதிகரித்துள்ளது. கடந்த 3 மாதங்களாக கிலோ ₹20 முதல் ₹30 வரை மட்டுமே விற்ற நிலையில், புரட்டாசி மாதத் தேவை அதிகரிப்பால் தற்போது தினசரி சந்தையில் வரத்து அதிகரித்தும் கிலோ ₹50 வரை தாராளமாக விற்பனையாகிறது. நல்ல விளைச்சலுடன் கூடுதல் விலையும் கிடைத்து போதிய லாபம் ஈட்டுவதால் அப்பகுதி விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி

✕
✕