ஆடிப்பெருக்கு: பத்திரப்பதிவுக்கு கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு

சுபமுகூர்த்த மற்றும் விசேஷ தினங்களில் ஆவணப் பதிவுகள் அதிகமாக நடப்பதால், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, ஆடிப்பெருக்கை முன்னிட்டு வரும் 3ஆம் தேதி அனைத்து சார்-பதிவாளர் அலுவலகங்களிலும் பத்திரப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பதிவுத்துறை அறிவித்துள்ளது. ஒரு சார் பதிவாளர் அலுவலகங்களில் 100க்கு பதிலாக 150 டோக்கன்களும், இரண்டு சார் பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களில் 200க்கு பதிலாக 300 டோக்கன்களும் வழங்கப்படும்.

தொடர்புடைய செய்தி

✕
✕