வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் சென்னையில் உள்ள ஐஸ்வர்யா, ARC மற்றும் பிரசாந்த் உள்ளிட்ட முன்னணி செயற்கை கருத்தரித்தல் மையங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் 2-வது நாளாக இன்று (செப்.3) சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்று வரும் இச்சோதனையில் மருத்துவமனைகளின் முக்கிய கணக்கு வழக்குகள் மற்றும் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு வருகின்றன. சோதனை முழுமையாக நிறைவடைந்த பின்னரே வரி ஏய்ப்பு தொடர்பான விவரங்கள் வெளியாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.