துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சியில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். தஞ்சாவூர் அருகே பிள்ளையார்பட்டி பகுதியில் திமுக நிர்வாகி ஒருவரின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க நாளை (பிப்., 07) துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரவுள்ளார். இதற்காக, அப்பகுதியில் திமுக கொடியேற்றும் பணி நடைபெற்றது. அப்போது சேலம் பகுதியைச் சேர்ந்த கோகுல், கார்த்திக் ஆகியோர் இரும்பு குழாய் ஊன்றும் போது மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.