சிக்கிம் மாநிலத்தில் இடைவிடாது கனமழை பெய்து வருவதால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. முக்கிய சாலை தடைப்பட்டதால் போக்குவரத்து தடைபட்டு 500-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் சிக்கியுள்ளனர். இதற்கிடையில் மங்கன் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு 11 பேருடன் சென்ற சுற்றுலா வாகனம் ஒன்று ஆற்றில் மூழ்கியது. இதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், 8 சுற்றுலா பயணிகள் காணாமல் போயுள்ளனர். கனமழை காரணமாக அவர்களை தேடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.