மஞ்சள் நிறத்தில், விஜய் படத்துடன் தவெக கொடி!

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுக விழா ஆகஸ்ட் 22ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் கொடி ஏற்றி ஒத்திகை பார்க்கப்பட்டுள்ளது. இன்று பௌர்ணமி என்பதால் கொடி ஏற்றி ஒத்திகை பார்க்கப்பட்டதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இந்த கொடி மஞ்சள் நிறத்திலும், நடுவில் விஜய்யின் முகம் பொறிக்கப்பட்டு பறக்கவிடப்பட்டது. 40 அடி உயரத்தில் பறந்த கொடியின் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

நன்றி: நியூஸ் 18 தமிழ்நாடு

தொடர்புடைய செய்தி