சிறையிலுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு பார்வை குறைபாடு ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு சிகிச்சை அளிக்க அந்நாட்டு அரசு மறுப்பதாகவும் அவரது மகன்கள் குற்றம் சாட்டியுள்ளனர். லண்டனில் இன்று (பிப்.17) செய்தியாளர்களை சந்தித்த அவர்கள், தந்தையை நேரில் சந்திக்க தங்களை அனுமதிக்க வேண்டும் என பாகிஸ்தான் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 2023 முதல் சிறையிலிருக்கும் இம்ரான் கானின் உடல்நிலை குறித்த இந்த புகார் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.