இம்ரான்கான் இஸ்லாமாபாத் ஜெயிலுக்கு மாற்றம்.. பாகி., அமைச்சர் உறுதி

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், ஊழல் வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இம்ரான் கானின் உடல்நிலையை மதிப்பீடு செய்ய மருத்துவக் குழு அமைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், ‘இம்ரான் கான் இஸ்லாமாபாத்தில் உள்ள சிறைக்கு மாற்றப்படுவார்’ என பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் தெரிவித்தார். இதற்கிடையே, இம்ரான் கானுக்கு உரிய சிகிச்சை அளிக்காததை கண்டித்து அவரது கட்சி உட்பட எதிர்க்கட்சியினர்கள் நாடாளுமன்றம் அருகே உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

தொடர்புடைய செய்தி