இந்தியர்கள் தங்கத்தை பாதுகாப்பான முதலீடாக கருதி வருகின்றனர். தற்போதைய உலக பொருளாதார சூழலில், தங்கம் விலை கடும் ஏற்ற இறக்கமாக உள்ளது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வட்டி விகிதங்களை உயர்த்தி வருவதால், முதலீட்டாளர்கள் ஏற்கனவே வாங்கி வைத்த தங்கத்திலிருந்து பணத்தை எடுக்கத் தொடங்கியுள்ளனர். இதனால், வரும் மாதங்களில் தங்கத்தின் விலையில் 15% முதல் 20% வரை சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது. கிராமுக்கு ரூ.1000 முதல் ரூ.1500 வரையும் குறையலாம் என தெரிவிக்கின்றனர்.