IRCTC-இல் டிக்கெட் புக் செய்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

பண்டிகை காலங்களில் லட்சக்கணக்கானோர் ஒரே நேரத்தில் டிக்கெட் புக் செய்வதால், சில சமயங்களில் IRCTC-யின் சர்வரில் பிரச்னை ஏற்படுகிறது. இதனால் டிக்கெட் புக் ஆகாமல் பணம் வங்கி கணக்கிலிருந்து டெபிட் ஆகிவிடுகிறது. இத்தகைய சமயங்களில், அதற்கான ரீஃபண்ட் தொகை 3 நாட்களுக்குள் உங்கள் வங்கி கணக்கிற்கு வந்து சேர வேண்டும். அவ்வாறு பணம் வராத பட்சத்தில், பயணிகள் உடனடியாக care@irctc.co.in என்ற மின்னஞ்சல் முகவரிக்குத் தங்கள் புகாரை அனுப்பி தீர்வுகாணலாம் என்று IRCTC அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி