தவெக தலைவர் விஜய் நிர்வாகிகளுடன் இன்று முக்கிய ஆலோசனை

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தவெக தலைவர் விஜய் இன்று (பிப்.10) மாலை 4 கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்துகிறார். வரும் பிப்.13-ம் தேதி சேலத்தில் நடைபெறவுள்ள பிரசார பொதுக்கூட்டத்தில் 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், அது குறித்த முக்கிய முடிவுகள் இக்கூட்டத்தில் எடுக்கப்பட உள்ளன. மேலும், விருப்ப மனு விநியோகம் மற்றும் தேர்தல் களப்பணிகள் குறித்தும் நிர்வாகிகளுக்கு விஜய் ஆலோசனைகளை வழங்கவுள்ளார்.

தொடர்புடைய செய்தி