நடிகர் நெப்போலியன் அரசியலில் கடந்து வந்த முக்கிய நிகழ்வுகள்

நடிகர் நெப்போலியன் சினிமாவைத் தொடர்ந்து அரசியலிலும் பயணித்தவர். திமுகவில் இணைந்த அவர், 2001-ம் ஆண்டு வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனார். 2009-ம் ஆண்டு பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்று எம்பியானார். பின்னர் மத்திய அரசில் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சராக பதவி வகித்தார். 2014-ல் திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். தற்போது அரசியலில் இருந்து விலகி தொழில் மற்றும் குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகிறார்.

தொடர்புடைய செய்தி