10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று (மே 20) வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 94.31% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்நிலையில், பள்ளிக்கல்வித் துறை வெளியிட்ட அறிவிப்பில், “இந்த ஆண்டு 10ம் வகுப்பு தேர்வில் 49,538 மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை. தேர்ச்சி பெறாதவர்கள், துணை தேர்வுகளுக்கு வருகிற மே 26ம் தேதி முதல் ஜூன் 6ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். துணை தேர்வுகள் ஜூலை 8 முதல் 15ம் தேதி வரை நடைபெறும்” என தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி