இஸ்ரேல் - ஈரான் இடையேயான போர் சூழல் காரணமாக இந்திய பங்குச் சந்தைகள் சரிவுடன் வர்த்தகமாகின. அதன்படி சென்செக்ஸ் ஆயிரம் புள்ளிகள் சரிந்து 80 ஆயிரத்து 238 புள்ளிகளில் வர்த்தகமானது. அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிஃடி 313 புள்ளிகள் குறைந்து 24 ஆயிரத்து 865 புள்ளிகளில் வர்த்தகமானது. இது ஒரு மாதத்துக்குப் பாதிவான குறைந்தபட்ச நிலை ஆகும். இந்த சரிவால் மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பில் இருந்து ரூ.6.5 லட்சம் கோடிக்கு மேல் குறைந்துள்ளது.