2027-ம் ஆண்டிற்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகித கணிப்பை சர்வதேச நாணய நிதியம் (IMF) மாற்றியமைத்துள்ளது. அதன்படி, ஏப்ரல் மாதத்தில் 6.5% ஆக கணிக்கப்பட்டிருந்த வளர்ச்சி விகிதம் தற்போது 6.4% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தனியார் மற்றும் சேவை துறைகளின் சாதகமான சூழலால் இந்தியா தொடர்ந்து வேகமாக வளர்ந்து வருவதாகவும், 2028 நிதியாண்டில் இந்த வேகம் 6.7%-ஐ எட்டும் என்றும் IMF சுட்டிக்காட்டியுள்ளது.