ஒவ்வொரு மனிதரும் குளிக்கும்போது ஆக்கபூர்வமான விஷயங்கள் குறித்து சிந்திக்கின்றனர். இந்த நிகழ்வு ஆராய்ச்சியில் உறுதி செய்யப்பட்டுள்ளது. நாம் குளிக்கும்போது நமது உடலின் ஹார்மோன் அமைப்பு தூண்டப்பட்டு, மூளையும் யோசனைகளை உருவாக்குகிறது. இதனால் பலருக்கும் குளியலறையில் படைப்பாற்றல் என்பது ஏற்படுகிறது. நாம் பயன்படுத்தும் சோப், அதன் வாசனை, குளிக்கும் சத்தம், இளம் சூடுள்ள நீர் போன்றவை மனதை அமைதிப்படுத்தி சிந்தனைக்கு வழிவகை செய்கிறது.