சட்டவிரோத பார்கள், மது விற்பனை: 500 மதுபாட்டில்கள் பறிமுதல்

சென்னை, போலீஸ் கமிஷனர் அபின் தினேஷ் மோடக் உத்தரவின்பேரில், சென்னையில் உள்ள 12 காவல் மாவட்டங்களிலும் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இதில் சட்டவிரோதமாக பார்கள் நடத்தியதாகவும், மது பாட்டில்களை பதுக்கி வைத்து சில்லரை விற்பனையில் ஈடுபட்டதாகவும் மொத்தம் 16 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 500 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வேளச்சேரி, திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக செயல்பட்ட பார்கள் மூடப்பட்டு, ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி