இளையராஜாவின் 'வேலியண்ட்' சிம்பொனி ஜூன் 1 வெளியீடு

இசைஞானி இளையராஜா, 1976ல் 'அன்னக்கிளி' படத்தின் மூலம் அறிமுகமாகி, 1000க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். லண்டன், துபாய் ஆகிய நகரங்களில் சிம்பொனி இசை நிகழ்ச்சிகளை நடத்திய இவர், ஆசிய கண்டத்தின் முதல் இசையமைப்பாளர் என்ற பெருமையைப் பெற்றார். சென்னையில் மே 30 அன்று 'FROM RAJA WITH LOVE' என்ற பெயரில் நடைபெறவிருந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக, அவரது 'வேலியண்ட்' சிம்பொனி வருகிற ஜூன் 1 அன்று அனைத்து ஆடியோ வெளியீட்டுத் தளங்களிலும் வெளியாகும் என மெர்குரி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த சிம்பொனி இதுவரை பொதுவெளியில் வெளியிடப்படவில்லை.

தொடர்புடைய செய்தி