சென்னையில் இளையராஜாவின் பிரம்மாண்ட சிம்பொனி இசை நிகழ்ச்சி

லண்டன் மற்றும் துபாயை தொடர்ந்து, இசைஞானி இளையராஜா சென்னையில் வரும் மே 30-ம் தேதி "FROM RAJA WITH LOVE" என்ற பெயரில் பிரம்மாண்ட சிம்பொனி இசை நிகழ்ச்சியை நடத்த உள்ளார். நூற்றுக்கணக்கான சர்வதேச மற்றும் உள்நாட்டு இசைக்கலைஞர்கள் நேரலையாக பங்கேற்கும் இந்த நிகழ்ச்சி, ரசிகர்களுக்கு ஒரு உலகத்தரம் வாய்ந்த இசை விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 1000 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள இளையராஜாவின் இந்த நேரடி அறிவிப்பு, அவரது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி