இளையராஜாவின் இசைப் பயணம்: 50 ஆண்டுகள் நிறைவு

இசையமைப்பாளர் இளையராஜாவின் முதல் படமான 'அன்னக்கிளி' வெளியாகி 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி, சென்னையில் நேற்று (மே 14) செய்தியாளர்களிடம் அவர் பேசினார். அப்போது, 'வருடங்கள் நகர்ந்தாலும் நான் அப்படியேதான் இருக்கிறேன். ரசிகர்கள் என்னை இசை கடவுளாகப் பார்க்கிறார்கள், அது அவர்களின் விருப்பம். கடவுளுக்கு தான் கடவுள் என்ற எண்ணம் இருக்குமா? அதுபோலவே இதுவும். 'ஜனனி... ஜனனி...' பாடல் மனதை அமைதிப்படுத்தும் என்றும், தான் இல்லாவிட்டாலும் பாடல்கள் நிலைத்து நிற்கும் என்றும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி