இசைஞானி இளையராஜாவின் மகளும், பாடகியுமான பவதாரணி கடந்த 2024-ல் புற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்தார். நேற்று (பிப். 12) அவரின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் இளையராஜா, கங்கை அமரன், கார்த்திக் ராஜா ஆகியோர் கலந்து கொண்டார்கள். மேடையில் பவதாரணியின் பாடல் பாடப்பட்ட போது அங்கிருந்த கார்த்திக் ராஜா, கங்கை அமரன் கண்கலங்கினார்கள். இதனால் அந்த மேடையே மிகவும் உணர்வுப்பூர்வமாக இருந்தது.
நன்றி: நியூஸ்18