‘கருப்பு’ திரைப்படத்தில் இசைஞானி இளையராஜாவின் பதிப்புரிமை தொடர்பான வசனம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், படத்தயாரிப்பு நிறுவனம் தற்போது விளக்கம் அளித்துள்ளது. இசை உலகை ஆட்சி செய்யும் அவரை காயப்படுத்தும் எண்ணமோ, களங்கப்படுத்தும் எண்ணமோ தங்களுக்கு சிறிதும் இல்லை என்றும், படத்தில் அவரது பெயரை பயன்படுத்தியது செய்தியை கடத்தும் நோக்கத்திற்காக கையாளப்பட்ட ஒரு தற்செயல் நிகழ்வு மட்டுமே என்றும் படக்குழுவினர் தெளிவுபடுத்தியுள்ளனர்.
நன்றி:PT