இளையராஜா பயோபிக் - திரைக்கதை, வசனம் எழுதும் எழுத்தாளர் எஸ்.ரா

இசையமைப்பாளர் இளையராஜா பயோபிக் திரைப்படத்தின் திரைக்கதை, வசனத்தை எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் எழுதி உள்ளார். இதுகுறித்து எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் தனது எக்ஸ் தள பக்கத்தில், “இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் பணியாற்றுகிறேன். இரண்டு மாத கால தொடர் விவாதங்களுக்குப் பிறகு திரைப்படத்தின் திரைக்கதை மற்றும் வசன வடிவை எழுதி இயக்குநர் அருண் மாதேஷ்வரனுக்குக் கொடுத்துள்ளேன்" என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி