மகாராஷ்டிராவின் மும்பையில் இன்று (பிப்., 04) அதிகாலையில் விடுதியின் மொட்டை மாடியில் இருந்து குதித்து 21 வயது ஐஐடி மாணவர் தற்கொலை செய்துகொண்டார். மும்பையின் பவாய் பகுதியில் உள்ள விடுதி எண் 4 இல் அதிகாலை 1 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது. நமன் அகர்வால் என அடையாளம் காணப்பட்ட அந்த மாணவர், பொறியியல் படிப்பில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். அவர் ராஜஸ்தானில் உள்ள பிலானியை சேர்ந்தவர். மாணவர் மரணத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.