போலி ATM கார்டு பயன்படுத்தி, சிலர் பணத்தை திருடி வருகின்றனர். இந்த சூழலில் நீங்கள் விரைவாகச் செயல்பட்டு மோசடியை முறையாகப் புகாரளித்தால், உங்கள் பணத்தை திரும்பப்பெறலாம். உங்களுக்குத் தெரியாமல் ATM-களில் தரவு திருடப்பட்டிருந்தாலும் கூட இது பொருந்தும். வாடிக்கையாளர்களின் ஈடுபாடு இல்லாமல் மோசடி நடந்திருந்தால், சம்பந்தப்பட்ட வங்கி தான் இழப்பை ஏற்க வேண்டும் என RBI அறிவித்துள்ளது. மேலும், வாடிக்கையாளர்கள் தங்களது சீக்ரெட் PIN மற்றும் OTP ஆகியவற்றை பகிர கூடாது என எச்சரித்துள்ளது.