சாஸ்திரங்களின்படி கோயிலுக்கு செல்லும்போது கோபுரத்தையும் தல விநாயகரையும் கைக்கூப்பி வணங்கிவிட்டு, கொடிமரம், பலிபீடம் மற்றும் நந்தியை வழிபட வேண்டும். அதனை தொடர்ந்து, மூலக்கடவுளை தரிசித்துவிட்டு கருவறையை 3 முறை வலம் வந்து வணங்குவது அவசியமாகும். இறுதியாக, கொடிமரத்தின் அருகில் விழுந்து வணங்கி, சிறிது நேரம் வடக்கு முகமாக அமர்ந்து தியானித்த பின்பே வீடு திரும்ப வேண்டும்.