₹1 கோடி சம்பாதித்தால் ₹2 கோடிக்கு பிரச்னை: தனுஷ்

ரூ.150 சம்பாதித்தால் ரூ.200-க்கு பிரச்னை வருகிறது, ரூ.1 கோடி சம்பாதித்தால் ரூ.2 கோடிக்கு பிரச்னை வருவதாக தனுஷ் வேதனையோடு தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தில் நடந்த 'குபேரா' பட ப்ரி-ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய அவர், EMI, லோன் என்று நிறைய பிரச்னை இருப்பதாகவும் கூறியுள்ளார். ஆனால், காசு பணம் இல்லையென்றாலும் அம்மாவின் அன்பு எப்போதும் இருக்கும் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். தனுஷுக்கு அப்படி என்ன தான் பிரச்னை என நெட்டிசன்கள் இணையத்தில் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி