“உண்மையில் இன்று எம்ஜிஆர் உயிருடன் இருந்திருந்தால், அதிமுகவின் இன்றைய நிலையை நினைத்து அவர் கதறி அழுதிருப்பார்” என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். மேலும், “சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி திரையரங்கிற்கு சென்று படம் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது எம்ஜிஆர் திரைப்படத்தை பார்த்து, அவரது கண்களில் இருந்து தாரைதாரையாக கண்ணீர் வடிந்தது. உண்மையில் இன்று எம்ஜிஆர் உயிருடன் இருந்திருந்தால், அதிமுகவின் இன்றைய நிலையை நினைத்து அவர் கதறி அழுதிருப்பார்” என்றார்.